பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது! (படங்கள்)
பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்ஷயை அவர் மணந்துள்ளார்....
2002-ல் மணி ரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது.
மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகத் தற்போது பணியாற்றி வரும் கீர்த்தனாவுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்ஷயை அவர் மணந்துள்ளார். அக்ஷய், விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.