முகப்பு
செய்திகள்

ரஜினியின் ட்விட்டர் கணக்கில் சிறு மாற்றம்!

ரஜினியின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய தளங்களின் கணக்குகள் அனைத்தும் Rajinikanth என்கிற பெயரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:26 PM
பகிர்:

சமூகவலைத்தளங்கள் மீதி அதிகக் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. அதன் விளைவாக, தன்னுடைய ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியுள்ளார்.

இதுவரை ட்விட்டர் கணக்கு மட்டும் வைத்திருந்த ரஜினி தற்போது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களிலும் இணைந்துள்ளார். ரசிகர்களின் கருத்துகளை மேலும் அறிந்துகொள்ளவும் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ரஜினியின் ஃபேஸ்புக் ஐடி - https://www.facebook.com/Rajinikanth/, ரஜினியின் இன்ஸ்டகிராம் ஐடி - https://www.instagram.com/rajinikanth/.

இந்நிலையில் @superstarrajini என்றிருந்த தனது ட்விட்டர் கணக்கை @rajinikanth என மாற்றியுள்ளார் ரஜினி.

இதையடுத்து ரஜினியின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய தளங்களின் கணக்குகள் அனைத்தும் Rajinikanth என்கிற பெயரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் சமூகவலைத்தளங்களில் புதிதாக இணைபவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →