முகப்பு
செய்திகள்

நாடோடிகள் 2 படப்பிடிப்பு தொடங்கியது!

முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைகிறது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:26 PM
பகிர்:

2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் "நாடோடிகள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன.

முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைகிறது. இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், கலை இயக்குநராக ஜாக்கி மற்றும் ஏ.எல்.ரமேஷ் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

இப்படத்தின் நாயகியாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

நாடோடிகள்2 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.