முகப்பு
செய்திகள்

என் வாழ்க்கை எப்படிப்பட்டது?: உண்மையை வெளிப்படுத்தவுள்ளார் நடிகை சன்னி லியோன்!

நான் ஏன் கனடாவிலிருந்து வெளியேறினேன்? என் பெயரில் சன்னி என ஏன் உள்ளது? என் வாழ்க்கை எப்படிப்பட்டது?...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

நான் ஏன் கனடாவிலிருந்து வெளியேறினேன்? என் பெயரில் சன்னி என ஏன் உள்ளது? என் வாழ்க்கை எப்படிப்பட்டது?

இதற்கான விடையை விரைவில் வழங்கவுள்ளார் பிரபல நடிகை சன்னி லியோன்.

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக இந்தியாவில் கவனம் பெற்ற சன்னி லியோன், ஜிஸ்ம் 2, ராகினி எம்எம்எஸ்2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Karenjit என்கிற பெயரில் வெளிவரும் வெப்சீரீஸ் தொடரில் நடிகை சன்னி லியோனி வாழ்க்கை விவரிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.

தன் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வெப் தொடராக இது இருக்கும். ஜீ 5 தளத்தில் ஒளிபரப்பாகும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.