முகப்பு
செய்திகள்

சென்னையில் நடைபெற்ற ஸ்ரீதேவி நினைவஞ்சலிக் கூட்டம்! (படங்கள்)

போனிகபூர் ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீதேவி நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

நடிகை ஸ்ரீதேவி, உறவினரின் திருமணத்தில் பங்கேற்க துபை சென்றபோது, குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் கடந்த மாதம் 28-ஆம் தேதி துபையிலிருந்து மும்பைக்குக் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

அஸ்தி கரைப்பு: ஸ்ரீதேவியின் பெரும்பாலான சொத்துகள் அவருக்கு மிகவும் பிடித்த கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளன. அங்கு கடலில் கடந்த 4-ஆம் தேதி அவரது அஸ்தி கரைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், அவரது மகள்கள் குஷி, ஜான்வி ஆகியோர் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். இதை அறிந்த தமிழ்த் திரையுலகினர் பலரும் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. நகரில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் தங்கிருந்த அவர்களை நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் சந்தித்து ஆறுதல் கூறினார். நடிகை ஸ்ரீபிரியா, லதா உள்ளிட்ட திரையுலகத்தினரும் போனிகபூரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீதேவியின் புகைப் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, போனிகபூர் ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீதேவி நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில், தமிழ்த் திரையுலகினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.