தனக்குத் தானே பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொண்ட பிரபல நடிகை!
வாழ்வதற்காக நான் படங்களில் நடிப்பதில்லை. அவற்றினால் தான் நான் உயிருடன் வாழ்கிறேன்...
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் இன்று தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
இதையடுத்து அவருக்குச் சமூகவலைத்தளங்களில் ஏராளமான வாழ்த்துகள் குவிகின்றன. ஆலியா பட், தன்னுடைய இன்ஸ்டகிராம் தளத்தில் இதுபற்றி கூறியதாவது:
வாழ்வதற்காக நான் படங்களில் நடிப்பதில்லை. அவற்றினால் தான் நான் உயிருடன் வாழ்கிறேன். அதனால் என்னுடைய 25-வது பிறந்தநாளின்போது நான் நடித்து வரும் ராஸி படத்தின் புகைப்படங்களை வெளியிடுகிறேன். 25 நாள்கள் கழித்து இதன் டிரெய்லர் வெளியிடப்படும். எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று சந்தோஷத்துடன் பதிவு செய்துள்ளார்.