முகப்பு
செய்திகள்

ஹிந்திக்குச் செல்லும் விக்ரம் வேதா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் மற்றும் பிளான் சி ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தமிழில் வெற்றிகரமாக ஓடிய... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:29 PM
பகிர்:

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் மற்றும் பிளான் சி ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தமிழில் வெற்றிகரமாக ஓடிய விக்ரம் வேதா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளது வொய் நாட் ஸ்டூடியோஸ். 

விக்ரம் வேதாவின் ஹிந்திப் பதிப்பையும் புஷ்கர் - காயத்ரி இயக்கவுள்ளார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

2017-ல் வெளிவந்த படங்களில் சிறந்த இந்தியப் படங்களின் பட்டியலை புகழ்பெற்ற திரைப்பட இணையத்தளமான ஐஎம்டிபி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பாகுபலி 2 படத்தைப் பின்னுக்குத் தள்ளி விக்ரம் வேதா முதலிடம் பிடித்தது.

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடித்த விக்ரம் வேதா படத்தை சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்தது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தார்கள். இசை - சாம் சி.எஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.