இந்திய கிரிக்கெட் அணியில் நம்ம தமிழ்ப் பசங்க: கஸ்தூரி மகிழ்ச்சி!
தமிழக மும்மூர்த்திகளை அனைவரும் பாராட்டுங்கள். விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக். நம்ம தமிழ் பசங்க...
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 போட்டியில் இந்திய அணியில் மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் அணியில் இடம்பெற்றதோடு சிறப்பாகவும் விளையாடி வருகிறார்கள்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கூறியதாவது:
தமிழக மும்மூர்த்திகளை அனைவரும் பாராட்டுங்கள். விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக். நம்ம தமிழ் பசங்க பின்றாங்க என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.