முகப்பு
செய்திகள்

மிஷ்கின் படத்தில் சாய் பல்லவி & நித்யா மேனன்?

மிஷ்கின் - பி.சி. ஸ்ரீராம் - சாந்தனு கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்க சாய் பல்லவி மற்றும் நித்யா மேனனிடம்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:30 PM
பகிர்:

மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின், தன்னுடைய சகோதரர் இயக்கிய சவரக்கத்தி படத்தின் கதையை எழுதி, தயாரித்ததோடு நடிக்கவும் செய்தார். அடுத்ததாக, பி.சி. ஸ்ரீராம் - சாந்தனுவுடன் கைகோர்த்துள்ளார்.

மிஷ்கின் - பி.சி. ஸ்ரீராம் - சாந்தனு கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் நடிக்க சாய் பல்லவி மற்றும் நித்யா மேனனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது உறுதிசெய்யப்பட்டுவிட்டால் இருவரும் மிஷ்கினின் படத்தில் நடிப்பது இதுவே முதல்முறையாக இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →