செய்திகள்

நடிகர் ஷாரூக்கானின் அழகான மீடியா மேனேஜர் யார் தெரியுமா?

நடிகர் ஷாரூக்கான் தற்போது ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் கத்ரீனா கயப்

சினேகா

நடிகர் ஷாரூக்கான் தற்போது ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் கத்ரீனா கயப், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜீரோ, அண்மையில் இறந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த கடைசிப் படம். இதில் அவர் நடிகையாக தன்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம்  இந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிகை கத்ரீனா கயப் போட்டோகிராபியில் மிகுந்த ஆர்வமுடையவர். தனது திறமையை விதவிதமான செல்ஃபி எடுத்து அடிக்கடி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் பாராட்டுக்களையும் லைக்ஸ்களையும் பெற்று வருபவர். அண்மையில் ஜீரோ பட ஷூட்டிங்கின் போதும் கத்ரீனா கயப் நிறைய போட்டோக்கள் எடுத்துள்ளார்.

இந்த முறை செல்பி அல்ல, அவர் அதிகம் தன் கேமரா கண்களால் சுட்டுத் தள்ளியது ஷாரூக்கானைத் தான். கத்ரீனாவை தனது மீடியா மேனேஜராக ஏற்கனவே அறிவித்திருத்திருந்தார் ஷாரூக்கான். தற்போது கத்ரீனா எடுத்த புகைப்பங்களை சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது அவருக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. 

கத்ரீனா கயஃபுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் ஷாரூக்கான் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் நடிகை ஜூஹி சாவ்லாவுடன் தான் நடித்த தனது முதல் படமான தர் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியையும், தற்போது நடித்து வரும் ஜீரோ படத்தையும் ஃபோட்டோஷாப் செய்து ஒரு படத்தை வெளியிட, அது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT