முகப்பு
செய்திகள்

‘பத்மாவத்’ முதல் நாள் வசூல் சாதனையைத் தகர்த்த புதிய ஹிந்திப் படம்!

சமீபத்தில் வெளியாகி இந்தியாவில் ரூ. 300 கோடி வரை வசூலித்த பத்மாவத் படத்தின் முதல் நாள் வசூலை...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:37 PM
பகிர்:

டைகர் ஷெராஃப், திஷா பதானி நடிப்பில் அஹ்மத் கான் இயக்கத்தில் நேற்று வெளியான படம் - பாகி 2. க்‌ஷணம் என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக் இது. 

சமீபத்தில் வெளியாகி இந்தியாவில் ரூ. 300 கோடி வரை வசூலித்த பத்மாவத் படத்தின் முதல் நாள் வசூலை பாகி 2 படம் தாண்டியுள்ளது. பாகி 2, முதல் நாளன்று இந்தியாவில் பிரிவியூ காட்சிகள் உள்பட ரூ. 25.10 கோடி வசூலித்துள்ளது. இத்தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பத்மாவத் படம் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 19 கோடி வசூலித்தது. இதன் அடிப்படையில் 2018-ல் இந்தியாவில் அதிக முதல் நாள் வசூல் கண்ட படம் என்கிற பெருமையை அடைந்துள்ளது பாகி 2 படம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.