கன்னடம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகை மேக்னாவுக்குத் திருமணம் நடைபெற்றது. நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை அவர் மணந்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த மேக்னா, நடிகர்கள் சுந்தர் ராஜ் - பிரமிளா ஆகியோரின் மகள். 2009-ல் தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் மேக்னா. அடுத்த வருடம் தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்கிற படத்தில் நடித்தார். மேலும் சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ஏராளமான கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவைக் காதலித்து வந்தார் மேக்னா. கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று பெங்களூரில் கிறிஸ்தவ முறைப்படி மேக்னா - சிரஞ்சீவி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. நாளை இந்து முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது. நாளை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.