செய்திகள்

ஆபாசமான படங்களுக்குத் துணை போகும் தயாரிப்பாளர்கள் சங்கம்: இயக்குநர் பாரதிராஜா குற்றச்சாட்டு!

எழில்

இலைமறைக் காயாகச் சொல்லப்பட்ட விஷயங்களை இன்று இலை போட்டுப் பரிமாறுகிறார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:

சமீபகாலங்களாக சில தரங்கெட்ட படங்களால் நம் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியமும் இதிகாசமும் சராசரி மனித வாழ்க்கையையும் கொண்டாடிய நம் திரைப்படங்கள் இன்று சதையை மட்டுமே கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்திய திரைப்படங்கள் இன்று இரட்டை அர்த்த வசனங்களால் மலிந்து போய்க் கிடக்கின்றன. கொண்டாட வேண்டியத் திரைப்படங்கள் இன்று கொள்கையற்றுக் கிடக்கின்றன. இலைமறைக் காயாகச் சொல்லப்பட்ட விஷயங்களை இன்று இலை போட்டுப் பரிமாறுகிறார்கள். தாழ்ந்த உருவாக்கங்களால் தலை குனிகிறது நம் திரைப்படத்துறை. 

தமிழ் மக்களே, ரசனை மாற்றமென்று தரங்கெட்டுப் படைக்கும் படைப்புகளைப் பார்ப்பதைப் புறக்கணியுங்கள். சமீபத்தில் வெளியான முடை நாற்றமடைக்கும் ஒரு திரைப்படம், நம் தமிழ்நாட்டு இளைஞர்களைத் திசை திருப்பி, நம்முடைய ரசனையை மழுங்கடித்து, தற்போதைய தமிழகத்தின் பிரச்னைகளை மறக்கச் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது. இவர்களுக்குத் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் துணை போவதால்தான் ஆபாசமான திரைப்படங்களுக்கும் தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கின்றன. காரணம், தமிழர்களின் கலாசாரம், பண்பாடு தெரியாதவர்கள் பதவியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும். ஏன் இதற்கு மேலேயும் நடக்கும். இதற்கு ஒரு முடிவு கட்ட நாள் குறிக்க வேண்டும். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சென்சார் போர்டு என்ன செய்துகொண்டிருக்கிறது? சரியான விஷயங்களுக்குக்கூட கத்திரி போட்ட நீங்கள் சமீபகாலமாக ஆபாசமான படங்களுக்கு அனுமதியளிப்பது ஏன்? இரண்டாம் தரமான படைப்புகளை மறுபரிசீலனை செய்யுங்கள். இல்லையென்றால் சென்சாரையே சென்சார் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

பாரதிராஜா தன்னுடைய அறிக்கையில் எந்தவொரு படத்தையும் குறிப்பிடவில்லையென்றாலும் ஆபாசமான வசனங்களுக்காகச் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள கெளதம் கார்த்திக் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து படம் குறித்த அவருடைய கருத்தாகவே இது பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT