முகப்பு
செய்திகள்

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!

குறைவான திரையரங்கம் மற்றும் குறைந்த காட்சிகளே கிடைத்ததால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். இதனால்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:06 PM
பகிர்:

ஷாலோம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் - பொட்டு. பரத் நடிப்பில் வி.சி. வடிவுடையான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் இந்த வாரம் 25-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. இந்நிலையில் இப்படம் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஷாலோம் ஸ்டூடியோஸ் தரப்பில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பொட்டு படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் அதே தேதியில் 11 திரைப்படங்கள் வெளியாவதால் எங்கள் படத்துக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை. மிகுந்த பொருட்செலவில் எடுத்த எங்கள் படத்துக்குக் குறைவான திரையரங்கம் மற்றும் குறைந்த காட்சிகளே கிடைத்ததால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். இதனால் எங்கள் படவெளியீட்டைத் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் படத்தின் வெளியீட்டுக்கான மறுதேதியைக் குறைந்த படங்கள் வரும் தேதியாக முடிவு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.