தூத்துக்குடி சம்பவம் காரணமாக தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் புறக்கணித்த விஷால்!
இரும்புத்திரை படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்துள்ளதால் ஆந்திரா, தெலங்கானாவிலும் இந்தப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு...
விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - இரும்புத்திரை. இசை - யுவன் சங்கர் ராஜா.
இந்தப் படம் Abhimanyudu என்கிற பெயரில் தெலுங்கில் ஜூன் 1 அன்று வெளியாகவுள்ளது.
இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தூத்துக்குடித் துப்பாக்கிச்சூடு காரணமாக இந்த விழாவில் கலந்துகொள்ள விஷால் மறுத்துவிட்டார். அதேபோல படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
Advertisement
இரும்புத்திரை படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்துள்ளதால் ஆந்திரா, தெலங்கானாவிலும் இந்தப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் அங்கும் நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.