செய்திகள்

மீண்டும் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறாரா?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான

சினேகா

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாள்கள் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் சிநேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.

இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியின் 2-ம் பாகம் வரும் ஜூன் 11 தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.

பிக் பாஸ் 2 வில் பங்கேற்கவிருக்கும் இன்மேட்ஸ் யார் என்ற பரபரப்பான எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில் நடிகை ஓவியா அதில் கலந்து கொள்ளப் போகிறார் என்று சில சானல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தான் 100 நாட்கள் தங்கப் போவதில்லை நட்பின் நிமித்தமாக ஒரே ஒரு நாள் மட்டும் பங்கேற்கலாம் என்று கூறியிருக்கிறாராம் நடிகை ஓவியா. 

நடிகை ரம்பா பங்கேற்கவிருப்பதாக முன்பு ஒரு தகவல் வந்தது. ஆனால் அண்மையில் மூன்றாவது குழந்தைக்குத் தாயான நடிகை ரம்பாவால் 100 நாட்கள் வெளியில் தங்க முடியாது எனவே தவிர்த்துவிட்டார். மேலும் நடிகை கஸ்தூரி, சிம்ரன், உள்ளிட்டோர்  பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சி நேரலையில் வந்தபின்னர் தான் இவை உறுதிப்படும் என்கிறது மீடியா தரப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இப்படியொரு மேக்கிங்கா? பாராட்டுகளைப் பெறும் காந்தாரா சாப்டர் - 1!

ட்ரீம் கேர்ள்... மாளவிகா மோகனன்!

Kantara chapter 2 public review - காந்தாரா 2 எப்படி இருக்கு? | Rishab Shetty

SCROLL FOR NEXT