செய்திகள்

மீ டூ புகார் காரணமாக திரைப்பட சங்கத்திலிருந்து பாலிவுட் நடிகர் அலோக் நாத் நீக்கம்!

பிரபல பாலிவுட் நடிகர் அலோக் நாத் மீது தயாரிப்பாளரும் இயக்குநருமான விண்டா நந்தா மீ டூ புகார் தெரிவித்து தனது ஃபேஸ்புக்கில்...

எழில்

அண்​மைகால​மாகச் சமூகவலைத்​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

பிரபல பாலிவுட் மற்றும் சின்னத்திரை நடிகரான அலோக் நாத் மீது தயாரிப்பாளரும் இயக்குநருமான விண்டா நந்தா மீ டூ புகார் தெரிவித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவொன்றை எழுதியிருந்தார். 19 வருடங்களுக்கு முன்பு அலோக் நாத் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். இதையடுத்து மேலும் இரு நடிகைகள் அலோக் நாத் மீ டூ புகார் தெரிவித்தார்கள். இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான குற்றச்சாட்டைக் கூறியதாக விண்டா நந்தா மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் அலோக் நாத். 

இந்நிலையில் சிண்டா (Cine and TV Artistes' Association, CINTAA) என்கிற திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்களின் சங்கத்திலிருந்து அலோக் நாத் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த விண்டா நந்தா மற்றும் அலோக் நந்தா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு வர அலோக் நாத் மறுத்துவிட்டார். இதையடுத்து மீ டூ புகார் காரணமாக சிண்டா சங்கத்திலிருந்து அலோக் நாத் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே. வங்கத்தில் 2026 பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தம்: புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள்!

ஆக. 25 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம்! - இந்தியா அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம்! விரைவில் வேறு இடத்துக்கு மாற்றம்!

மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயில் குப்பைத் தொட்டியில் 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிவு!

SCROLL FOR NEXT