செய்திகள்

சர்வதேச மோட்டார் பைக் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராகிறார் பிரபாஸ்!

சர்வதேச அளவில் பிரபலமான பிராண்ட் மோட்டார் பைக்குக்கு அம்பாஸிடராக செயல்பட பலகோடி ரூபாய் செலவில் பிரபாஸை ஒப்பந்தம் செய்யவிருக்கிறதாம் அந்த மோட்டார் வாகன நிறுவனம்.

சரோஜினி

பிரபாஸ் கடந்த மாதம் தனது 39 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் பரிசாக அடுத்தாண்டு ஆகஸ்டு 15 ல் வெளியாகவிருக்கும் அவரது ‘சாஹோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ‘30 ஷேட்ஸ் ஆஃப் சாஹோ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லரில் பிரபாஸ் படு வேகமாக ஒரு மோட்டார் பைக்கில் பறப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சர்வதேச பாப்புலர் பிராண்டுகளில் ஒன்றான அந்த மோட்டார் பைக்கின் பெயரைக் கவனிக்க இயலவில்லை. ஆனால், அந்த மோட்டார் வாகனத்துக்கான பிராண்டு அம்பாஸிடராக வெகு விரைவில் பிரபாஸ் அறிவிக்கப்படவிருப்பதற்கான சமிஞ்சைகள் தெரிகின்றன. அதிகாரப்ப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாவிட்டாலும் பிரபாஸ் ரசிகர்கள் வட்டாரத்தில் இது ஒரு கொண்டாடத்தக்க செய்தியாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பிரபலமான பிராண்ட் மோட்டார் பைக்குக்கு அம்பாஸிடராக செயல்பட பலகோடி ரூபாய் செலவில் பிரபாஸை ஒப்பந்தம் செய்யவிருக்கிறதாம் அந்த மோட்டார் வாகன நிறுவனம். பாகுபலி 1 தி பிகினிங் திரைப்படம் வெளியான சமயத்தில் மஹிந்திரா SUV ரக கார்களுக்கு பிராண்ட் அம்பாஸிடராகச் செயல்பட்டு வந்தவர் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! மூவருக்கு பகிர்ந்தளிப்பு

சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்: இளவரசு

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்வர் தொடக்கம்!

பூவிழி மலரோ... ஸ்ரீமுகி

SCROLL FOR NEXT