முகப்பு
செய்திகள்

நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை: நடிகை ரித்விகா ஆவேசம்!

தன் மீது சாதி ரீதியாக விமரிசனம் செய்பவர்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் ரித்விகா..

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் 100 நாள்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவுபெற்றது. ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு நடிகைகளும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார்கள். பிக் பாஸ் 2 போட்டியை நடிகை ரித்விகா வென்றார். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ரித்விகா தேர்வு செய்யப்பட்டார். அவருக்குக் கோப்பையும் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன. இரண்டாம் இடத்தை நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் மூன்றாம் இடத்தை நடிகை விஜயலட்சுமியும் பெற்றார்கள்.

இந்நிலையில் தன் மீது சாதி ரீதியாக விமரிசனம் செய்பவர்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் ரித்விகா. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா என்று ஆவேசமாகத் தன் கோபத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments