செய்திகள்

செக்கச் சிவந்த வானம்! என்னுடைய 23 ஆண்டு கால தவம் பலித்தது! நடிகர் அருண் விஜய் பேட்டி (விடியோ)

வி. உமா

செக்க சிவந்த வானம் படத்தில் அத்தனை பெரிய நட்சத்திரப் பட்டாளத்திலும் கவனம் பெற்று ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய். பெரியவர் சேனாதிபதியின் (பிரகாஷ் ராஜ்)  இரண்டாவது மகன் தியாகுவாக நடித்த அவர் பல இடங்களில் ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றுள்ளார். அதிலும் குறிப்பாக தனது தந்தையின் இருக்கையில் அமர்ந்து மிதப்புடன் அவர் பார்க்கும் பார்வையும், தம்பியுடன் கப்பலில் பேசும் பேச்சுக்களும், சிறையில் மனைவியைப் பார்க்கச் சென்ற இடத்தில் மனக் கலக்கத்துடன் திரும்புவதும் என பல இடங்களில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அருண் விஜய்.

இந்தப் படம் வெளியான சமயத்தில் சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் ஆஷாமீரா ஐயப்பனுக்கு அருன் விஜய் அளித்த நேர்காணல் இது. தனது 23 ஆண்டு கால திரை வாழ்க்கை குறித்தும், இயக்குநர் மணி ரத்னத்தின் படத்தில் ஒப்பந்தமான மகிழ்ச்சியான தருணம் பற்றியும், தனது அடுத்த படம் என்னவென்பது வரை பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார். 

செக்கச் சிவந்த வானம் படத்தில் தன்னுடைய காரெக்டரை எப்படி உள்வாங்கினார் என்பதைத் தொடர்ந்து சக நடிகர்களுடன் எப்படி ஒத்திசைவுடன் நடித்தார் என்பதையெல்லாம் மனம் திறந்து இந்த பேட்டியில் கூறியுள்ளார் அருண் விஜய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT