செய்திகள்

96 க்காக ட்விட்டரில் வெளிப்பட்ட பொறாமையற்ற நேசம்!

ஐஸ்வர்யாவின் அன்பை ஏற்றுக் கொண்டு பதிலுக்கு த்ரிஷாவும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் வடசென்னை திரைப்படத்திற்காக தனது அன்பை அவரைப் போலவே கட்டியணைத்து வெளிப்படுத்த விரும்புவதாக

சரோஜினி

இயக்குனர் R C பிரேம்குமாரின் சமீபத்திய திரைப்படம் 96. த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தின் கதை பள்ளிக்காலத்தில் முகிழும் காதல் நிறைவேறாமல் போன பின் அவரவர் வாழ்வில் தனித்தனியே செட்டிலாகி விடும் நாயகனும், நாயகியும் மீண்டும் சந்திக்கக் கூடிய வாய்ப்பையும் அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. இதில் விஜய் சேதுபதி ட்ராவல் போட்டோகிராஃபராக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதிக்கு மட்டுமில்லை இத்திரைப்படத்தில் நாயகி த்ரிஷாவுக்கு கூட வண்ணமயமான அதிக காஸ்ட்யூம்கள் கிடையாது. கதையின் பலம் நாயகன், நாயகி மட்டுமல்ல, அதிராமல் கதை சொல்லப்பட்ட விதமும் தான். நிறைவேறாத காதலைப் பற்றி பேசுமிடத்தில் கலாச்சார காவலர்களின் வாய்க்கு அவலாகி விடாமல் கதையை நகர்த்திச் சென்ற விதத்தைப் பாராட்டலாம். அத்துடன் படத்தில் த்ரிஷாவின் நடிப்பு அபாரம் என படம் பார்த்தவர்கள் மட்டுமல்ல சக நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் கூட த்ரிஷா மீதான அன்பை பொறாமையின்றி வெளிப்படுத்தியிருக்கிறார். த்ரிஷாவுக்கான தனது அன்பையும், பாராட்டுதல்களையும் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், ‘96 திரைப்படத்தில் நடித்ததற்காக நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். காரணம் பெரிதாக ஒன்றுமில்லை... சும்மா உங்களை கட்டி அணைத்து எனது அன்பை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.’ என்று பொருள் கொள்ளும்படியாக ஆங்கிலத்தில் ட்வீட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் அன்பை ஏற்றுக் கொண்டு பதிலுக்கு த்ரிஷாவும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் வடசென்னை திரைப்படத்திற்காக தனது அன்பை அவரைப் போலவே கட்டியணைத்து வெளிப்படுத்த விரும்புவதாக பதிலுக்கு ட்வீட்டியிருந்தார். இவர்களுக்கிடையில் பொழிந்துள்ள இந்த அன்புமழையை பார்க்கிற எவருக்கும் இரு ஹீரோயின்களிடையே எப்போதும் போட்டி, பொறாமையே இருக்கக் கூடும் என்ற எண்ணம் மாற வாய்ப்பிருக்கிறது. ஹீரோயின்களிலும் நேசத்துடனும், ஒருவரது வெற்றியைக் கண்டு மற்றவர் பாராட்டி பெருமிதப்படும் அளவுக்கு நட்புடனும் இருக்கக் கூடிய நடிகைகள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது இவர்களது சமீபத்திய ட்வீட்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

SCROLL FOR NEXT