செய்திகள்

சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களைத் தொடர்ந்து 3-ஆவது முறையாக விஜய், முருகதாஸ் கூட்டணி இதில் இணைந்துள்ளது. 

Raghavendran

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் "சர்கார்". துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களைத் தொடர்ந்து 3-ஆவது முறையாக விஜய், முருகதாஸ் கூட்டணி இதில் இணைந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் - விஜய் கூட்டணி 4-ஆவது முறையாக சர்கார் படத்தில் இணைந்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் டீசர் அக்டோபர் 19-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

SCROLL FOR NEXT