முகப்பு
செய்திகள்

என் தந்தையை மிரட்டுகிறார் சுசி கணேசன்: சித்தார்த் ஆவேசம்!

நான் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக இருந்தால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எங்களை மிரட்டியுள்ளார்..

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

அண்​மைகால​மாகச் சமூகவலைத்​த​ளங்​க​ளில் மீ டூ எனும் தலைப்​பில் பெண்​கள் தங்​க​ளுக்கு நேர்ந்த பாலி​யல் துன்​பு​றுத்​தல்​க​ளை​யும், கொடு​மை​க​ளை​யும் பகிர்ந்து வரு​வது பர​வ​லாகக் கவ​னத்​தைப் பெற்று வரு​கி​றது. குறிப்​பாக, சில முக்கிய பிர​மு​கர்​க​ளுக்கு எதி​ராக முன்​வைக்​கப்​ப​டும் குற்​றச்​சாட்​டு​க​ளும் பெரும் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்தி வரு​கின்​றன.

இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் தெரிவித்துள்ளார் கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை. காரில் வைத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து இருவரும் பேட்டியளித்தார்கள். இதையடுத்து ஃபேஸ்புக்கில் கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடந்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன். 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் லீனா மணிமேகலைக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நடிகர் சித்தார்த், சுசி கணேசன் தன்னுடைய தந்தையை மிரட்டியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

Advertisement

என்னுடைய வயதான தந்தையிடம் போனில் பேசியுள்ளார் இயக்குநர் சுசி கணேசன். நான் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக இருந்தால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எங்களை மிரட்டியுள்ளார். இதனால் நான் அனைவருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால், முன்பை விடவும் இப்போது நான் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக உள்ளேன். மனவலிமையுடன் போராடுங்கள் சகோதரி என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments