விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - ராட்சசன். இசை - ஜிப்ரான்.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினி. அவர் இப்படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷாலைத் தொலைப்பேசியில் அழைத்து படம் குறித்த தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி விஷ்ணு விஷால் ட்விட்டரில் கூறியதாவது:
சூப்பர் ஸ்டார் ரஜினி உங்களைத் தொலைப்பேசியில் அழைத்து ஆச்சரியப்படுத்தும்போது நீங்கள் சந்தோஷத்தில் குதிப்பீர்கள். ராட்சசன் படம் குறித்து அவர் சொன்ன சில வார்த்தைகள் - அற்புதம், அற்புதம், அற்புதம். நடிப்புல தூள் கிளப்பிட்டீங்க. காவல் உடையில் கச்சிதமாக இருக்கீங்க. வில்லன் யாரு? அட்டகாசமான உடல் மொழி. இயக்குநர் மற்றும் உங்களுடைய கூட்டணி அபாரம் என்று பாராட்டியதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.