முகப்பு
செய்திகள்

முதல் நாள் வசூலில் பெரும் சாதனை: ‘சீமராஜா' படத்தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

சீமராஜா படம் தமிழ்நாட்டில் முதல் நாளன்று ரூ. 10 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடித்துள்ள படம் - சீமராஜா. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இசை - இமான், ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. தமிழகமெங்கும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படம் வசூலில் சாதனை செய்துள்ளதாகப் படத்தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது:

சீமராஜா படத்தின் வசூல் விவரங்கள் கிடைத்துள்ளன. முதல் நாள் வசூலில் எங்களுடைய சீமராஜா புதிய சாதனை படைத்துள்ளது. இது சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் கிடைத்த அதிகமான வசூல். இரு இலக்க எண்ணை எட்டியுள்ளது. உச்சம். படக்குழு பெருமைப்படுகிறது என்று ட்வீட் செய்துள்ளார். 

Advertisement

இதையடுத்து சீமராஜா படம் தமிழ்நாட்டில் முதல் நாளன்று ரூ. 10 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 2018-ல் காலா படத்துக்குப் பிறகு அதிக முதல் நாள் வசூலை அடைந்த படம் என்கிற பெருமையையும் அடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments