செய்திகள்

தீராப் பகை... தந்தைக்கும் சொந்த மகளுக்கும் நடுவில் தொடரும் டக் ஆஃப் வார்!

சரோஜினி

நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகளும் நடிகையுமான வனிதாவுக்கும் இடையிலான சர்ச்சைகுரிய சண்டைகளைப் பற்றி ஊரே அறியும். வனிதா விஜயகுமார், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை விஜயகுமார், தன் மகனை கடத்தி வைத்துக் கொண்டு தன்னோடு அனுப்ப மறுத்ததாகக் காவல்துறையில் தன் தந்தை மேல் வழக்குத் தொடர்ந்த வகையில் ஊடகங்களில் பரபரப்புக் கிளப்பியவர். அந்தப் பரபரப்புகள் எல்லாம் ஓய்ந்து அம்மா மஞ்சுளா இறப்பின் போது இறுதி அஞ்சகி செலுத்த வந்தவரைக் கூட நடிகர் விஜயகுமாரும், வனிதாவின் சகோதர, சகோதரிகளும் புறக்கணித்தனர். இபடி தந்தைக்கும், மகளுக்குமான பிரச்னை முற்றி நீ யாரோ, நாங்கள் யாரோ ரேஞ்சில் இருந்தது அவர்களுக்கிடையிலான பந்தம்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் தயாரிப்பதாகக் கூறிக்கொண்டு நடிகை வனிதா, தன் தந்தைக்குச் சொந்தமான ஆலப்பாக்கம் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துப் பணி புரிந்து வந்தார். தற்போது திரைப்படத் தயாரிப்பு வேலைகள் முடிந்த பின்னரும், அந்த வாடகை வீட்டுக்கான ஒப்ப்ந்தம் முடிந்த பின்னரும் கூட வீட்டைக் காலி செய்து தராமல் இழுத்தடிக்கிறார். கேட்டால், வீடு தனக்குச் சொந்தமானது என்று கூறி வீட்டைக் காலி செய்ய மறுப்பதாகத் தகவல். இதனால் கோபமுற்ற நடிகர் விஜயகுமார், தன் சொந்த மகள் மீதே மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தனக்குச் சொந்தமான வீட்டிலிருந்து மகள் வனிதாவை உடனடியாக அப்புறப்படுத்தி வீட்டைக் காலி செய்து தருமாறு காவல்துறை உதவியை நடிகர் விஜயகுமார் நாடி இருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்புக் கிளப்பியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT