முகப்பு
செய்திகள்

ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி பட டீசர் வெளியீடு!

ஏ.ஹெச். காஷிஃப் என்கிற புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார். இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமாவின் மகன்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வரும் ஜோதிகா, அடுத்து இந்தியில் வித்யாபாலன் நடித்த "தும்ஹாரி சுலு' வின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். தனஞ்ஜெயனின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் வானொலி தொகுப்பாளராக ஜோதிகா நடித்துள்ளார். 

ராதாமோகன் இயக்கும் இப்படத்துக்கு காற்றின் மொழி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. விதார்த், லக்‌ஷ்மி மஞ்சு, மனோபாலா போன்றோரும் நடித்துள்ளார்கள். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான துமாரி சுலு, ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 50 கோடி வசூலித்துள்ளது.

ஏ.ஹெச். காஷிஃப் என்கிற புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார். இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமாவின் மகன்.

Advertisement

அக்டோபர் 18 அன்று வெளிவரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments