செய்திகள்

குலு மணாலியில் நிலைமை எப்படி உள்ளது?: நடிகர் கார்த்தி தகவல்!

எழில்

கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மலையில் இருந்த தேவ் படக்குழுவினர் 140 பேர் வெள்ளத்தால் சிக்கியுள்ளார்கள். சாலைப் போக்குவரத்து தடைப்பட்டதால் காரில் 5 மணி நேரம் தவித்த கார்த்தி ஒருவழியாக மீண்டு, தற்போது சென்னைக்குத் திரும்பியுள்ளார். நிலச்சரிவினால் சாலைகளைப் பயன்படுத்தமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் ஊர் திரும்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   இதுபற்றி நடிகர் கார்த்தி ட்வீட் செய்ததாவது:

நேற்றிரவு எங்களில் சிலர் சென்னைக்குத் திரும்பிவிட்டோம். இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அங்குதான் உள்ளார்கள். அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள். அங்கு மின்சாரம் இல்லை. சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஒருநாள் கழித்து அவர்கள் திரும்பிவருவார்கள். மழை விரைவில் நிற்கும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார். 

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு ரூ. 55 கோடி செலவில் உருவாகி வரும் ஆக்‌ஷன் படத்தில் நடித்துவருகிறார் கார்த்தி. தேவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கிவருகிறார். இசை - ஹாரிஸ் ஜெயராஜ். புதிய இயக்குநர், ஆக்‌ஷன் படம், ரூ. 55 கோடி பட்ஜெட், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற அம்சங்களால் இந்தப் படம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT