செய்திகள்

ஜீ5 உங்களுக்கான பொழுதுபோக்கின் ஒரே இடம்!

உங்கள் மனம் கவர்ந்த ஜீ5 சானலில் கொட்டிக் கிடக்கும் நிகழ்ச்சிகளில் உங்கள் மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை

DIN

உங்கள் மனம் கவர்ந்த ஜீ5 சானலில் கொட்டிக் கிடக்கும் நிகழ்ச்சிகளில் உங்கள் மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை எப்படி தேர்ந்தெடுத்துப் பார்ப்பது? அதை சுலபமாக்க இதை முதலில் படித்து விடுங்கள்.

தேவதையை கண்டேன்

உங்களுக்கு த்ரில்லர் ஜானர் பிடிக்குமா? ஆம் என்றால் இந்த தொடர் உங்கள் மனதைக் கவர்ந்துவிடும் என்பது உண்மை. ஸ்ரீகுமார், ஷியாமளி நாயர் நடித்துள்ள சைக்காலாஜிகல் த்ரில்லரான இந்தத் தொடர் சஸ்பென்ஸ் மிகுந்தது. பணக்காரனான வாசுதேவன், நடுத்திர வர்க்கத்துப் பெண்ணான லட்சுமியை திருமணம் செய்து கொள்கிறான். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே வாசுவின் வித்யாசமான போக்கு வெளிப்படத் துவங்குகிறது. அவனிடம் அப்படி என்ன மாற்றங்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தேவதையக் கண்டேன் தொடரைத் தான் நீங்கள் காண வேண்டும்.

கள்ளச் சிரிப்பு

இன்னொரு அட்டகாசமான தொடர் ‘கள்ளச்சிரிப்பு’. கதாநாயகி அம்ருதா ஸ்ரீனிவாசன் தமிழ் டிஜிட்டல் நடிகர்களில் மிகப் பிரபலமானவர். இவர் 3 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நல்ல  கதை சொல்லியான ரோஹித் நந்தகுமார் வெப் சீரிஸில் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமாகிறார். திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இதன் தயாரிப்பாளர். இளம் தம்பதியருக்கிடையே நடக்கும் பிரச்னையில், எதிர்பாராதவிதமாக கணவன் கொலை செய்யப்படுகிறான். அதை மறைக்கும் முயற்சியில் அவள் ஒரு விஷயத்தை செய்கிறாள். அது என்னவென்று கள்ளச்சிரிப்பைப் பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.

அழகிய தமிழ் மகள்

பரதம் மற்றும் கபடியில் ஜொலிக்கும் பூங்கொடியின் வாழ்க்கையும் கனவையும் தொடரும் தொடர் இது எனலாம். கபடி அவளது வாழ்க்கையில் கொண்டு வந்த மாற்றங்களுள் முக்கியமானது சென்னைக்கு அவள் வந்தது. ஷீலா ராஜ்குமார், புவி, சுபலட்சுமி ரங்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பூங்கொடி வெற்றி பெற்றாளா? அவளது கனவுகள் பலித்ததா என்பதை எல்லாம் சுவாரஸ்யமாக பார்க்க வேண்டும் என்றால் அழகிய தமிழ் மகளை தினந்தோறும் திரையில் பாருங்கள்.

மெர்சல்

நடிகர் விஜய். சமந்தா அகினேனி, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெர்சல் படம் அனைவரும் ரசித்து மகிழக் கூடிய ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் படமாகும். டாக்டர் மாறன் என்பவருக்கும் மேஜிஷியன் வெற்றி என்பவருக்கும் உள்ள உறவு என்ன, இரட்டையர்களான இவர்கள் இருவரும் எப்படி இணைகிறார்கள், அதன் பின் மருத்துவ துறை ஊழல்களை எப்படி அம்பலப்படுத்துகிறார்கள், தங்கள் தந்தையின் மரணத்துக்கு எவ்வாறு பழிவாங்கினார்கள் என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லும் படமிது.

ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ்

இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க, பிரபல பின்னணி பாடகரான விஜய் ப்ரகாஷ் மற்றும் கார்த்திக் நடுவர்களாக கலக்கும் குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டி இது. இனிமையான குரலுக்கும், திறமைக்கும் சவாலான போட்டி இது. இளம் பாடகராக யார் தேர்வடையப் போகிறார்கள் என்பதை நிகழ்ச்சியைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்களோ.

ஃபியர் ஃபைல்ஸ்

பேய் பிசாசு கதைகளில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? உங்கள் தேடல் இங்கே நிறைவடையும். காரணம் ஃபியர் ஃபைல்ஸ் அத்தகைய தொடர்தான். உண்மைச் சம்பவத்தை திகிலுடன் இணைந்து பரபரப்பாக எடுக்கப்பட்ட இந்தத் தொடர் நிச்சயம் உங்களை திகிலூட்டும் என்பது நிச்சயம்.

காமெடி கில்லாடிஸ்

சிரிக்க ஆசையா? தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களின் அட்டகாசமான இந்த காமெடி ரியாலிட்டி ஷோ உங்களுக்கானதுதான். தேவதர்ஷனி, நந்தினி, பால சரவணன், டேனியல் மற்றும் ஆர்ஜெ விக்னேஷ்காந்த் ஆகியோர் நடுவராக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி உங்கள் சிரிப்புக்கு கியாரண்டி தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT