சல்மான் கான் நடிக்கும் தபாங் 3: மீண்டும் ஹிந்திப் படம் இயக்கும் பிரபுதேவா!
10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள்...
செய்திகள்சல்மான் கான் நடிக்கும் தபாங் 3: மீண்டும் ஹிந்திப் படம் இயக்கும் பிரபுதேவா!
10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள்...
தபாங் படத்தொடரின் 3-ம் பாகம் மூலமாக மீண்டும் இணைந்துள்ளார்கள் சல்மான் கானும் பிரபுதேவாவும்.
2010-ல் வெளியான தபாங் படத்தை அனுராக் காஷ்யப்பும் தபாங் 2 படத்தை அர்பாஸ் கானும் இயக்கினார்கள். சல்மான் கான் நடிக்கும் தபாங் 3 படத்தை இயக்குகிறார் பிரபுதேவா.
இந்தூரில் இன்று தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சல்மான் கான். இவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ளார்.
10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். கடைசியாக 2015-ல் சிங் ஈஸ் பிளிங் என்கிற ஹிந்திப் படத்தை இயக்கினார் பிரபுதேவா. இதன்பிறகு விஜய் இயக்கிய தேவி படம் முதல், தமிழில் நடிகராகப் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நான்கு வருடத்துக்குப் பிறகு ஹிந்திப் படம் இயக்க மீண்டும் களமிறங்கியுள்ளார்.