செய்திகள்

ரஜினி - ஏ.ஆர். முருகதாஸ் பட நாயகி நயன்தாரா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

எழில்

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். 

லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 முதல் மும்பையில் தொடங்கும் என்று அறியப்படுகிறது. 2020 பொங்கல் சமயத்தில் படம் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சில நாள்களுக்கு முன்பு, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

இந்நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ரஜினி 167’ படத்தின் கதாநாயகியாக நயன்தாரா மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். படக்குழு குறித்து வெளியாகியுள்ள இதர தகவல்கள் தவறானவை என்று மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT