முகப்பு
செய்திகள்

வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் போஸ்டர்! 

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்துக்கு 'தர்பார்' என்று தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Updated On : 9 ஏப்ரல், 2019 at 10:44 AM
பகிர்:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்துக்கு 'தர்பார்' என்று தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இப்படத்துக்கு தொடர்ச்சியாக தேதிகளை ஒதுக்கியுள்ளார் ரஜினி. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ஏப்ரல் 10 மும்பையில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. 'தர்பாரில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.


இது ரஜினியின் 167-வது படமாகும். லைகாவும் ரஜினியும் இணையும் இரண்டாவது படம் இது. இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தர்பார் 2020-ம் ஆண்டு பொங்கல் அன்று திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.