முகப்பு
செய்திகள்

பிக் பாஸில் என்னைக் கலந்துகொள்ளச் சொன்னதே விஜய் சேதுபதி தான்: இயக்குநர் சேரன் விளக்கம்

னக்கும் மக்களுக்கும் இடையே நான்கு வருட இடைவெளி விழுந்துவிட்டது. திரும்பவும் என்னுடைய முகத்தை அவர்களுக்குப் பழக்கப்படுத்தவேண்டும்... 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:42 AM
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், உங்கள் பெயரைக் குறிப்பிடாமல், இதர போட்டியாளர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்றொரு டாஸ்க் நடத்தப்பட்டது.

சினிமாவில் நுழைந்து பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற்றுவிட்டீர்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதைவிடவா பேரையும் புகழையும் பெறப்போகிறீர்கள்? இது எதை நோக்கிய பயணம் என்கிற கேள்வி இயக்குநர் சேரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

சினிமாவில் நுழைந்து நிறைய பேரும் புகழும் விருதுகளும் கிடைத்தன என்பது உண்மைதான். ஆனால் இவற்றைக் காப்பாற்றிக்கொள்ளக் கூடிய போராட்டம் பெரிதாக உள்ளது. ஆட்டோகிராப் படம் தான் நான் அனுபவித்த கடைசி வெற்றி. அதற்குப் பிறகு போராட்டங்களிடையே தான் படங்கள் செய்துள்ளேன். அந்த இடத்தை விட்டு போய்விடவும் முடியாது. சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்ற பிறகா திரும்பவும் பேர், புகழ் கிடைக்கப் போகிறது என்கிற குழப்பம் என் வீட்டிலும் இருந்தது. இதில் வருமானம் இருக்கிறது என்பது இன்னொரு பக்கம். அது இல்லை என்று சொல்லவில்லை. பிறகு ஏன் பிக் பாஸில் இணைந்தேன் என்றால், எனக்கும் மக்களுக்கும் இடையே நான்கு வருட இடைவெளி விழுந்துவிட்டது. திரும்பவும் என்னுடைய முகத்தை அவர்களுக்குப் பழக்கப்படுத்தவேண்டும். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நீங்க போங்க என்று என்னை அனுப்பியது விஜய் சேதுபதிதான். சார், நமக்கு நான்கு வருட இடைவெளி விழுந்துவிட்டது. ஒண்ணு, உங்களைப் பற்றி இன்றைய அடுத்தத் தலைமுறைக்கு உங்களுக்குத் தெரியவேண்டும், இன்னொன்று, பிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லாக் குடும்பங்களிலும்  எல்லாக் கிராமங்களிலும் பார்க்கிறார்கள். இந்த 35 வருடங்களாக நீங்கள் விழுந்து எழுந்த அனுபவங்கள் அவர்களுக்குப் பாடம். உங்களுடைய அனுபவம் அவர்களுடைய வாழ்க்கையில் எங்கேயாவது ஓர் இடத்தில் உதவும். அந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள். அதன்மூலம் மக்களுக்கு நல்ல விஷயத்தைப் பகிரமுடியும் என்றார். அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன் என்று பதில் அளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →