செய்திகள்

'விக்ரம் வேதா'வாகும் பாலிவுட் கான்கள்!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி தாதாவாகவும், மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் நடித்த வெற்றிப் படம் விக்ரம் வேதா.

சினேகா

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி தாதாவாகவும், மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் நடித்த வெற்றிப் படம் விக்ரம் வேதா. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தை ஹிந்தியில் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து அமீர்கான் மற்றும் சயீஃப் அலிகான் இதில் நடிக்க உள்ளனர். தமிழில் இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஹிந்தியிலும் இயக்க உள்ளனர். வேதாவாக அமீர்கானும், விக்ரமாக சயீஃப் அலிகானும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமீர், சயீஃப் ஆகியோர் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். ஹிந்தியிலும் விக்ரம் வேதா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மார்ச் 2020-ல் தொடங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

நெல் ஈரப்பத அளவு: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

SCROLL FOR NEXT