செய்திகள்

எக்கச்சக்கமாக வசூல் சாதனை படைத்த அஜித் படம்!

DIN

ஒரு முன்னணி நாயகனுக்கு உரிய அத்தனை வணிக அம்சங்களையும் தன்னுடைய படங்களில் வைத்திருந்தாலும் ‘பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டியவர்கள்’ என்கிற செய்தியை தொடர்ந்து சொல்வதில் ஆர்வமுள்ளவர் அஜித். ‘பெண்கள் இப்போதுதான் படிக்க வெளியே வருகிறார்கள். அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்’ என்கிற செய்தி ‘வேதாளம்’ திரைப்படத்தின் இறுதியில் சொல்லப்பட்டிருக்கும். நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் அந்தச் செய்தி பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு காட்சியில் நீதிமன்றத்தில் அஜித் வாதிடும்போது சமுதாயத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவார். அதற்கான 4 விதிமுறைகளைக் இது பெரிதும் கவனம் பெற்றது என்பது குறிப்படத்தக்கது. உலகம் முழுவதும் வெளியான இப்படம் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாளில் சென்னை திரையரங்குகளில் ரூ.1.58 கோடி வரையில் வசூலைக் குவித்தது. 

இது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் வசூலான ரூ.1.12 கோடியை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. போலவே விஸ்வாசம் முதல் நாளில் ரூ.88 லட்சம் தான் வசூலித்தது. விவேகம் ரூ.1.21 கோடியும், என்ஜிகே ரூ.1.03 கோடியும், எண்ட்கேம் ரூ.1.17 கோடியும் வசூல் குவித்திருந்தது. ஆனால், ரஜினியின் 2.0 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2.64 கோடி என்பதும் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2.41 கோடி வசூல். இரண்டாம் நாளில் நேர்கொண்ட பார்வை படம் ரூ.1.17 கோடி வசூலித்தது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் ரூ.14 கோடி வரையில் வசூலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இத்திரைப்படம் வெளியாக நான்கு நாட்கள் ஆன நிலையில் எல்லா திரையரங்கிலும் ரசிகரக்ள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.  ரசிகர்கள், திரை ஆர்வலர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களும் கொண்டாடும் படமாக நேர் கொண்ட பார்வை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT