செய்திகள்

நடிகர் விஷால் அனிஷாவின் திருமணம் நிறுத்தப்பட்டதா?

சினேகா

நடிகர் விஷால் மற்றும் அனிஷா அல்லா இருவருக்கும் மார்ச் 16-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினூரில் நிச்சயதார்த்தத்தம் விமரிசையாக நடந்தது. தெலுங்கு நடிகை அனிஷா அல்லா, ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டி மற்றும் பத்மாஜாவின் மகள். இவ்விழாவில் விஷால் ஷெர்வானி உடையில் தோற்றமளித்தார், அனிஷா வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் புடவை அணிந்தார். இந்த ஜோடி மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒருவர் மீது ஒருவர் மிகவும் காதலுடன் இருந்ததனர் என்பது நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் பார்த்தாலே தெரியும்.

நிச்சயதார்த்தம் முடிந்த பின், இருதரப்பிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமண ஏற்பாடுகள் விரைவாக விஷால் வீட்டில் தொடங்கியது. இரண்டு குடும்பங்களும் கலந்து திருமணத் தேதியை முடிவு செய்தனர். அக்டோபர் 9-ம் தேதி இந்த ஜோடிக்கு திருமணம் செய்ய பெரியவர்களால் முடிவெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அக்டோபர் 9-ம் தேதி திருமணம் நடைபெறும் என்று விஷாலும் தெரிவித்தார்.

இந்நிலையில், சமீபத்திய தகவல்களின்படி, தம்பதியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திருமணம் உறுதியான ஆறு மாதங்களுக்குள் திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து எந்த அதிகாரபூர்வமான தகவலும் இதுவரை இல்லை, ஆனால் அனிஷா மற்றும் விஷால் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதால் இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனிஷா சமூக ஊடகங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். அவரது முன்னாள் காதலருடன் பி.டி.ஏ புகைப்படங்களை (PDA Photos) பதிவிடுவதில் அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. பிடிஏ என்றால் Public display of Affection. அதாவது ஒருவர் மீதான அன்பை புகைப்படங்களில் வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டாமல் இருப்பது, அதை சமூக வலைத்தளங்களில் எவ்வித தயக்கமின்றி பதிவிடுவதும் ஆகும். முன்னாள் காதலரின் புகைப்படங்களை எதற்காக அனிஷா பதிவிடுகிறார் என்பது கேள்விக்குள்ளானது.

அதிர்ச்சியூட்டும் வகையில், அனிஷா விஷாலுடனான சேர்ந்து எடுத்த படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதளங்களிலிருந்து நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரியில் இந்த ஜோடியின் நிச்சயதார்த்தத்தில் மோகன்லால், சூரியா மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஷால் அடுத்து சுந்தர்.சி. இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT