செய்திகள்

ஆங்கிலத்துடன் ஒப்பிடும்போது தமிழ் தான் கெத்து: ‘பிக் பாஸ்’ அபிராமி

எழில்

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

இந்நிலையில் மக்களின் குறைந்த வாக்குகளை வாங்கிய காரணத்துக்காகக் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை அபிராமி. சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

யாருக்கும் எதையும் காண்பிப்பதற்காக நான் ஆங்கிலத்தில் அதிகமாகப் பேசவில்லை. தமிழ் மொழியை விடவும் வேறொரு மொழி இல்லை என் மனதில். ஆங்கிலத்துடன் ஒப்பிடும்போது தமிழ் தான் கெத்து. அதனால் தமிழை நான் குறைவாக எல்லாம் நினைக்கவில்லை. ஆனால் இது ஒரு பழக்கம் இல்லையா! ஆங்கில வழிக் கல்வியில் படித்ததால் அதிக ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசுகிறோம். அது ஒரு தப்பான பழக்கம். அதை மாற்றிக்கொள்ளவேண்டும். எனவே தமிழில் தான் பேசவேண்டும் என்று கூறும்போது அதைப் பின்பற்றுவது கடினமாக உள்ளது. நம் தாய்மொழியிலேயே தொடர்ந்து பேசமுடியவில்லை என்பது மிகவும் வெட்கப்படவேண்டிய விஷயம் தான். நான் வேண்டுமென்றே ஆங்கிலத்தில் அதிகமாகப் பேசவில்லை. பொதுவாகவே நான் அப்படித்தான் பேசுவேன். நான் பல மொழிகள் கலந்தும் பேசுவேன். சில சமயம் ஹிந்தி, தெலுங்கும் கன்னடம் வார்த்தைகளைக் கலந்துகூடப் பேசுவேன். பல மொழி நண்பர்கள் உள்ளதால் அப்படி. தமிழில் தொடர்ந்து பேசுவது எனக்கு சந்தோஷம் தான். அப்போதுதான் மக்களுடன் தொடர்புகொள்ள முடியும். அவர்களுக்குப் பிடித்ததைச் செய்வது எனக்கும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT