முகப்பு
செய்திகள்

விளம்பரப்படங்களில் தொடங்கி குறும்படத்தில் வளர்ந்து சினிமாவில் சாதித்த விஷால்!

தமிழ்த் திரை இசையில் சமீபமாக கவனிக்கத்தக்க ஆளுமையாக வளர்ந்து வருகிறார் விஷால் சந்திரசேகர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

தமிழ்த்திரை இசையில் சமீபமாக கவனிக்கத்தக்க ஆளுமையாக வளர்ந்து வருகிறார் விஷால் சந்திரசேகர். அவரது பயணம் குறித்து பேசும் போது, 'விளம்பரப் படங்களின் மூலம்தான் என் இசை பயணம் தொடங்கியது. இதுவரை 250 விளம்பரப் படங்களுக்கும், சுமார் 450 குறும்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட 20 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். எனது முதல் படமான 'இனம்' படத்தின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. டொரன்டோ திரைப்பட விழாவிற்கு நியமனம் செய்யப்பட்டது. அடுத்தது 'குற்றம் 23' படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

'சங்கிலி புங்கிலி கதவ தொற', 'குற்றம் 23', 'ரங்கூன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'ஜாக்பாட்' போன்ற படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றது. ராதா மோகன் இயக்கத்தில் 'பிருந்தாவனம்' படத்தில் பணியாற்றினேன். அப்படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது.

விஜய் டிவியில் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் முதலில் திரையிடப்பட்ட படமே நான் இசையமைத்த படம்தான். அந்த சீசனில் 17 குறும்படங்களுக்குப் பணியாற்றினேன். சீசன்-1 இல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் பெற்றேன். சீசன்-2 இல் மூன்று குறும்படங்களுக்கு இசையமைத்து மூன்றுக்குமே விருது பெற்றேன். அதே போல் சீசன்-3 இல் விருது பெற்றேன். அது எனக்குப் பெரும் தூண்டுதலாக இருந்தது தனிப்பட்ட முறையில் என்னை ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி' என்கிறார் விஷால் சந்திரசேகர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments