முகப்பு
செய்திகள்

‘பிக் பாஸ்’ மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு

தொழிலதிபர் ஜோ மைக்கேல் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

Updated On : 27 ஆகஸ்ட், 2019 at 3:50 PM
பகிர்:

தொழிலதிபர் ஜோ மைக்கேல் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தொழிலதிபர் ஜோ மைக்கேல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கும் நடிகை மீரா மிதுனுக்கும் இடையே பணப்பிரச்னை உள்ளது. தற்போது என் மீதும் என் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளார். இதனால் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.