முகப்பு
செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் தொடர்பாக...

Updated On : 28 ஏப்ரல், 2026 at 9:25 AM
கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன். - படம்: யூடியூப்
பகிர்:

மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக இன்று(ஏப். 28) நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.

திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திக்கு விஜய லீலை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) காலை நடைபெற்றது.

வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி, மீனாட்சி சுந்தரேசுரவர் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் பல வண்ண மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

திருக்கல்யாணம் முடிந்தவுடன் பெண்கள் தங்களது மாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொண்டு வழிபட்டனர்.

summary

The celestial wedding of Goddess Meenakshi and Lord Sundareswarar was celebrated with great grandeur in Madurai today (April 28).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.