முகப்பு
செய்திகள்

அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கிறது: விஜய்க்கு தாய் ஷோபா கடிதம்!

தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கிறது...

Updated On : 28 ஆகஸ்ட், 2019 at 3:42 PM
பகிர்:

தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கிறது என விஜய்க்கு அவருடைய தாய் ஷோபா சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு அவருடைய தாய் ஷோபா எழுதியுள்ள வாழ்த்து மடலில் கூறியுள்ளதாவது:

நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் அசைப்போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக்குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்தக் காகிதத்தில் வடிப்பது?

Advertisement

அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்ப்பரிக்கும் இள வயதில் கூட நீ அமைதியின் அவதாரமாக இருக்கையில் இயங்குகையில் என் ஆழ் மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிக்கையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்?

தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில் என்று எழுதியுள்ளார். 

​​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.