செய்திகள்

அஜித் பட இயக்குநர்.. ஹாரிஸ் ஜெயராஜ் இசை.. அட்டகாசமாய்த் துவங்கிய சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் திரைப்பயணம்

DIN

சென்னை: அஜித் பட இயக்குநரின் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் 'லெஜெண்ட்' சரவணனின் திரைப்பயணம் அட்டகாசமாய்த் துவங்கியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் முதலில் தங்கள் நிறுவன விளமபரப் படங்களில் நடித்து வந்தார். அப்போதே அவர் தியுரையுலகில் நடிகராக விரைவில் அறிமுகமாக உள்ளார் என்று கூறப்பட்டது. அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் அஜித் பட இயக்குநரின் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் 'லெஜெண்ட்' சரவணனின் திரைப்பயணம் அட்டகாசமாய்த் துவங்கியுள்ளது.

முன்பு சரவணன் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர் களான ஜேடி-ஜெர்ரி இந்தப் படத்தை  இயக்குகின்றனர். இவர்கள் முன்பு விக்ரம், அஜீத் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த விசில் ஆகிய  படங்களை இயக்கியவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் சரவணனுக்கு கதாநாயகியாக 'மிஸ் இந்தியா' பட்டம் பெற்ற வட இந்திய மாடல் ஈத்திகா திவாரி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  முக்கிய வேடங்களில் பிரபு மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். 

இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை வேல் ராஜ் கவனித்துக் கொள்கிறார். பேண்டஸி ஜானரில் எடுக்கபப்டும் இந்தப் படத்தை, ஹீரோவாக நடிக்கும் சரவணனே தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை வடபழனி ஏ.வி.எம் ஸ்டூடியோவில் ஞாயிறன்று தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT