முகப்பு
செய்திகள்

நடிகர் அதர்வாவின் தம்பி நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட விஜய் (படங்கள்)

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் - விஜய் 64 படத் தயாரிப்பாளரின் மகளும் எஸ்.ஏ.சி.யின் தங்கை மகளுமான...

Updated On : 7 டிசம்பர், 2019 at 1:00 PM
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். டெல்லியில் ஒரு பகுதி படப்பிடிப்பு முடிந்தபிறகு, சென்னையில் சில காட்சிகளைப் படமாக்க இங்கு வந்துள்ளது படக்குழு. அடுத்ததாக கர்நாடகாவில் ஒரு மாதப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் - விஜய் 64 படத் தயாரிப்பாளரின் மகளும் எஸ்.ஏ.சி.யின் தங்கை மகளுமான இயக்குநர் சினேகா (சட்டம் ஒரு இருட்டறை 2 இயக்குநர்) ஆகிய இருவரும் விரைவில் காதல் திருமணம் செய்யவுள்ளார்கள். இந்நிலையில் ஆகாஷ் - சினேகாவின் திருமணம் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னையில் நேற்று லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.