முகப்பு
செய்திகள்

அஜித்தின் வலிமை ஷூட்டிங் தள்ளிப் போகிறதா?

இந்த ஆண்டு அஜித் நடித்த ‘விசுவாசம்’, 'நேர்கொண்ட பார்வை’ என ரெண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:27 PM
ajith
பகிர்:

இந்த ஆண்டு அஜித் நடித்த ‘விசுவாசம்’, 'நேர்கொண்ட பார்வை’ என ரெண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்து இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவருமே மீண்டும் இணைந்து அஜித் நடிப்பில் வலிமை படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் எப்போதும் அசத்தும் அஜித் இந்தப் படத்துக்காக கடும் உடற்பயிற்சிகளைச் செய்து வருகிறார்.  

வலிமை படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.  விஸ்வாசம் படத்தின் சில காட்சிகள் அங்குதான் படமாக்கப்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில்தான் நடந்தது. இந்த ராசியை மனதில் வைத்து மறுபடியும் வலிமை படத்துக்காக அங்கு பிரமாண்டமான செட்டுகள் போடப்பட்டு வருகின்றன.  விரைவில் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அதன் பிறகு, படக்குழுவினர் வெளிநாட்டில் சில முக்கியமான காட்சிகளை படமாக்கம் செய்ய உள்ளனர்.  

வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் வகைமையை சேர்ந்தது என்பதால் அஜித்துக்கு நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளது. அஜித் பற்றி எந்த தகவல் மீடியாவில் வெளிவந்தாலும் அவரது ரசிகர்கள் கொண்டாடிவிடுவார்கள். இந்த விஷயங்களையெல்லாம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஃபேன் மேட் போஸ்டர்களில் தெறிக்க விட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். வலிமை படத்தின் நடிகர், நடிகையர் குறித்த முழு விவரம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.