ஈரம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அறிவழகனின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அருண் விஜய். இது அவருடைய 31-வது படம்.
அருண் விஜய் - அறிவழகன் கூட்டணி இதற்கு முன்பு குற்றம் 23 என்கிற படத்தை உருவாக்கியது. இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய்யின் ஜோடியாக ரெஜினா கேசண்ட்ரா நடிக்கிறார். இசை - சாம் சிஎஸ். படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
2020 ஏப்ரலில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.