செய்திகள்

குயின் இணையத் தொடர்: இயக்குநர் கெளதம் மேனன் பதில் தர உத்தரவு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும் இணையத் தொடராகவும் உருவாகி வருகிறது...

எழில்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும் இணையத் தொடராகவும் உருவாகி வருகிறது. கெளதம் மேனன் - பிரசாந்த் முருகேசன் இணைந்து இயக்கி வரும் குயின் என்கிற ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று இணையத் தொடரில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த இணையத் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதா எனது அத்தை. அவரது சட்டப்படியான வாரிசு நான். என்னுடைய அனுமதியைப் பெறாமல், எனது அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவும், இணையதள தொடராகவும் எடுக்க சிலா் முயற்சிக்கின்றனா். சென்னையைச் சோ்ந்த திரைப்பட இயக்குநா் ஏ.எல். விஜய், ‘தலைவி’ என்ற பெயரில் தமிழ் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், ஹைதராபாத்தைச் சோ்ந்த விஷ்ணுவா்தன் ‘இந்தூரி ஜெயா’ என்ற பெயரில் ஹிந்தியில் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதள தொடா் எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனா். எனவே என்னுடைய அனுமதி இல்லாமல் எனது அத்தையும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா குறித்த திரைப்படத்தையோ, இணையதள தொடா்களையோ எடுக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகவோ, இணையதள தொடா்களையோ எடுக்க தடை கோரி உரிமையியல் வழக்குத் தொடர, ஜெ.தீபாவுக்கு அனுமதியளித்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்த படங்கள் தற்போது தான் தொடங்கியுள்ளன. ஆனால் குயின் இணையத் தொடர், சனிக்கிழமை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது என ஜெ. தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கின் ஆவணங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என கெளதம் மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் ஆவணங்களை கெளதம் மேனனுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று தீபா தரப்புக்கும் பதில் மனு தாக்கல் செய்ய கெளதம் மேனன் தரப்புக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து..! டி20 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை!

SCROLL FOR NEXT