செய்திகள்

ரஜினி படத்தில் குஷ்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

DIN

தர்பாருக்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது ரஜினியின் 168-வது படமாகும். 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. அடுத்ததாக, சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருந்தார். ஆனால், அதற்குப் பதிலாகத் தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. இப்படத்துக்கு இசை - இமான்.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், தனது 25-வது படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் மேலும் வெளியாகியுள்ளது. பிரகாஷ் ராஜ், மீனா ஆகிய இருவரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் குஷ்பு நடிப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT