செய்திகள்

குப்பையைப் பணமாக மாற்ற உதவும் இணையதளம்!

RKV

சென்னையில் மட்டும் நாள்தோறும் 5000 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. இப்படி வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரமாகி அகற்றப்படும் குப்பைகளைப் பிரித்து அப்புறப்படுத்துவது என்பது சென்னை மாநகராட்சிக்கு மிகப்பெரிய சவாலான காரியமாக இருந்து வருகிறது. எனவே சென்னையில் உருவாகும் குப்பைகளைப் பிரித்து விற்பனை செய்து பணமாக மாற்றும் பிரத்யேக இணையதளமொன்றை சென்னை பெருநகர மாநகராட்சியும், சீர்மிகு நகரம் அமைப்பினரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பாக 

- எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் வாயிலாக விற்பனையாளர் மட்டுமல்ல நுகர்வோரும் பலன் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் நம்மிடம் அதிக அளவில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் மற்றும் உலோகக் கழிவுகளைப் பற்றிய தகவல்களை நாம் பதிவு செய்து வைக்கலாம். மறுசுழற்சி செய்யக்கூடிய வசதியுள்ள மேற்கண்ட பொருட்களின் தேவை சிலருக்கு இருக்கக் கூடும். அப்படியானவர்கள் குறிப்பிட்ட இந்த இணையதளத்தில் தங்களுக்கென ஒரு கணக்கு வைத்திருந்தால் எஞ்சியுள்ள திடக்கழிவுகளை அதன் உடைமையாளர் நிர்ணயிக்கும் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள முடியும் என்கிறார்கள்.

இதனால் நாள்தோறும் அகற்றப்படும் குப்பைகளின் அளவு குறைய வாய்ப்பிருப்பதாக மாநகராட்சி அலுவலர்கள் கருதுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT