செய்திகள்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: தேசிய விருது விழாவைப் புறக்கணிக்கும் மலையாளப் படக்குழு!

சிறந்த மலையாளப் படமாகத் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுடானி ஃப்ரம் நைஜீரியா படக்குழுவினர்...

எழில்

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

இந்நிலையில் சிறந்த மலையாளப் படமாகத் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுடானி ஃப்ரம் நைஜீரியா படக்குழுவினர், தேசிய விருது விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். இப்படத்தின் இயக்குநர் ஜகாரியா முகமது ஃபேஸ்புக்கில் கூறியதாவது: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளார். இப்படத்தில் நடித்த சாவித்ரிக்கு, தேசிய விருதுக்கான நடுவர்களின் சிறப்பு விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலந்தூர் முதல்வர் திருமண மாளிகை! உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்!

கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

தமிழ்நாட்டை வீழ்த்த நினைக்கும் பாஜக: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்காவின் 126% வரி எதிரொலி! சூரிய சக்தி பங்குகள் 14% சரிவு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடக்கியது திமுக: கே. அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT