முகப்பு
செய்திகள்

படப்பிடிப்பின் முதல் நாளில் ரஜினியைச் சந்தித்தது குறித்து இசையமைப்பாளர் இமான் பரவசம்!

பாடலுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினி சாரைச் சந்தித்தேன்...

Updated On : 19 டிசம்பர், 2019 at 11:23 AM
பகிர்:

தர்பாருக்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது ரஜினியின் 168-வது படமாகும். 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்குகிறார். தலைவர் 168 என்று இப்போதைக்குக் குறிப்பிடப்படும் இப்படத்துக்கு இசை - இமான். கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி போன்றோர் நடிக்கிறார்கள்.  

கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் ரஜினியைச் சந்தித்த இசையமைப்பாளர் இமான், ட்விட்டரில் எழுதியுள்ளதாவது:

Advertisement

பாடலுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினி சாரைச் சந்தித்தேன். பாடலைப் பற்றி அவர் பாராட்டிப் பேசியது மிகவும் ஊக்கமாக உள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு என்னவிதமான உற்சாகத்தை அளிக்கிறார் இவர். அபாரம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.